மதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை!

தாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை “ என் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையோடு தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவரின் படத்தோடு ஒரு பிரமாண்ட விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிப்படம் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாக தமிழர்கள் மகிழச் அடைந்ததோடு அதை வைத்தவரகளுக்கும் உலகமெங்கும் இருந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கான மூலமாக “மிகமிக அவசரம்” தலைப்பில் தமிழ் திரைப்படம் ஒன்று தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒரு சாதாரண காவல் அதிகாரியை மையப்படுத்தி திரைக்கதை ஒன்றை அமைத்து இயக்கி தயாரித்துள்ளார் சுரேஸ் காமாட்சி, இவர் சிறந்த தமிழ் உணரவாளரும் தமிழீழ போராட்டத்தின் மீதும் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் மீதும் அளவுகடந்ததாக மரியாதையும் கொண்டுள்ளமை பல்வேறு சந்தர்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார், அதன் தொடர்ச்சியாக இப்போது மதுரை மாநகரத்தில் ஒரு விளம்பரமாக இருந்தாலும் பலராலும் பயத்தால் பின்னடிக்ககூடிய விடையத்தை துணிவோடு செயதுள்ளமையால் சமூகவலைத்தளம் எங்கும் வாழ்த்து குவிந்தவண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இன்று ராஜ்யசபாவிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பிக்களும் எதிராக 105
2012-ல் இந்தியாவை மட்டுமல்லாது உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கும் 4 பேரும்
பாலியல் வன்புணர்விற்கு பின் படுகொலை செய்யப்பட்ட பிரியங்கா ரெட்டியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்