கிழக்கில் சோதனை சாவடி!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புதிதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியை ஒரு தரப்பினர் கொண்டாடிய வேளையில், கல்முனை பகுதியில் வர்த்தக நிலையங்களை மூடப்பட்டதை காணமுடிந்தது.

அத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) பிரதான வீதியில் இராணுவ சோதனை சாவடிகள் திடீரென அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினரும் பொலிஸாராரும் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று எட்டாவது நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் சனாதிபதி தேர்தலை முன்னிட்டு இராணுவத்தினர் முன்னர் அமைத்திருந்த சாவடிகளிலிருந்து மீள அழைக்கப்பட்டு முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்று மீண்டும் புதிய சோதனை சாவடிகள் உருவாக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனியாக ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு உடன்படிக்கையில் கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டமை தவறானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
பேரினவாதிகளின் (பெரும்பான்மை சமூகத்தின்) மனதில் சந்தேகத்தை உருவாக்கும் சில விஷயங்களை சிறுபான்மையினர் செய்தால் மட்டுமே பெரும்பான்மை சமூகம் எதிர்வினையாற்றும். அதை

About இலக்கியன்

மறுமொழி இடவும்