மற்றுமொரு இனவாத அமைப்பும் ஆட்டத்தை நிறுத்த தயாரானது

நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசர்களுக்கு பின்னர் நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ள காரணத்தினால் இனிமேல் தேசத்தைப் பாதுகாக்க தேசிய அமைப்புகள் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூடிய விரைவில் புதிய நாடாளுமன்றத்தை அமைத்து நாட்டை அபிவிருத்த செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறும் ஜனாதிபதியிடமும் எதிர்க்கட்சி தலைவரிடம் வேண்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தங்களது குழுவிலும் குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கும் தண்டனை வழங்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் நால்வர் சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப்
அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியரான காலியா பரிஸ்டர் பிரான்சிஸ் இன்று
நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால்

About இலக்கியன்

மறுமொழி இடவும்