மஹிந்த பதவியேற்புடன் நாடாளுமன்றம் கலைகிறது?

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இன்று (20) பதவி விலகியுள்ளார்.

இந்நிலையில் நாளை (21) முன்னாள் ஜனாதிபதியும், ஒக்டோபர் 26 அரசியல் சதியின் போது போலிப் பிரதமராகவும் இருந்த மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கிறார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச பதவியேற்று ஒரு வாரத்தில் நாடாளுமன்றம் கூடும் போது நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.

இதன்படி, 2020 ஜனவரி மாதமளவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்