சுவிட்சர்லாந்து எல்லையில் நிலச்சரிவு: 8 பேரை காணவில்லை (காணொளி)

சுவிட்சர்லாந்தின் இத்தாலி எல்லையோரப் பகுதியான பாண்டோவில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 8 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சுவிட்சர்லாந்தின் இத்தாலி எல்லையோரப் பகுதியான பாண்டோவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் இதுவரை 8 பேரை காணவில்லை. காணாமல் போனவர்களில் சிலர் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.‌

பாண்டோ பகுதியிலிருந்த‌ நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்புற‌ப்படுத்தப்பட்டுள்ளனர். நிலச்சரிவு மீண்டும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பாண்டோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளை மண் மூடியுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் மோப்பநாய்கள் உதவியுடன் தொடர்ந்து மீட்பு படையினர் காணாமல் போனவர்களை தேடி வருகின்ற‌னர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்