மாவீரர் தினத்தில் மலையகத்தில் துண்டுப்பிரசுரம் – இருவர் கைது!

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் கொண்ட துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த இருவர் கைதாகியுள்ளனர்.

‘மலையகமும் எழுச்சியும்’, ‘எழுச்சி என்பது மலையகத்திற்கு எட்டா கனியா’ போன்ற வாசகங்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை பொகவந்தலாவ பகுதியில் விநியோகம் செய்த இரண்டு சந்தேகநபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (புதன்கிழமை) கைது செய்துள்ளனர்.

இதில் குறித்த துண்டுபிரசுரத்தினை கணினி ஊடாக அச்சிட்டவரும் உள்ளடங்குவார்.

இவர்களில் ஒருவர் பொகவந்தலாவ இராணிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் பொகவந்தலாவ டின்சின் நகர தொடர்பாடல் நிலைய உரிமையாளர் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

இச்சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, இவர்களை ஹற்றன் நீதாவான் முன்னிலையில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்