டெலோவிலிருந்து முளைக்கின்றது புதிய கட்சி?

இரண்டு வாரத்தில் புதிய தமிழ் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சட்டத்தரணி என்.சிறீகாந்தா அறிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து வெளியிடுகையில் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை விடுத்திருந்தார்.

அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை ஆதரிக்க கட்சி தலைமை முற்பட சிறீகாந்தா தரப்பு தனித்து பயணித்திருந்தது.

இந்நிலையில் தனித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்த கே.சிவாஜிலிங்கத்தை சிறீகாந்தா தரப்பு ஆதரிக்க அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக செல்வம் குழு அறிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவே இம்முயற்சியென தகவல்கள் தெரிவிக்கின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்