அரசியல் கைதிகள் விடுதலை:பொய்யான செய்தி!

தமிழ் அரசியல் கைதிகள் சிலர் ஜனாதிபதி கோத்தபாயவின் சிபார்சின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது பொய்யானதென தெரியவந்துள்ளது.

அவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை என்று அரசியல் கைதிகளது குடும்பங்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அரசியல் கைதிகள் எனக் குறிப்பிட்டு சிலர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கும் உண்மையான தமிழ் அரசியல் கைதிகளுக்கும் தொடர்பில்லை எனவும் அரசியல் கைதிகளது குடும்பங்களின்; தரப்பில் இருந்து எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதிலும் அனுராதபுரம் சிறையிலிருந்து அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லையென்பது உறுதியாகியுள்ளது.அங்கு தற்போது 8 அரசியல் கைதிகள் மட்டுமே தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் இன்றிரவு வரை அவர்கள் எவரும் விடுவிக்கப்பட்டிருக்கவில்லையெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை இப்போது சிறைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி 36 பேர் தண்டனை பெற்ற கைதிகளாகவும், 35 பேர் சந்தேகக் கைதிகளாகவும் மற்றும் 15 பேர் மேன் முறையீடு செய்த கைதிகளாகவும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகளின் போது அரசியல் கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்