கழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி

தமிழர்களுக்கு கழுத்தறுப்பு சைகை காட்டிய வழக்கில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என்பது பிரித்தானிய நீதிமன்றில் இன்று (06) நிரூபிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு லண்டன் உயர்ஸ்தானிகர் அகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என்று சைகை காட்டி கொலை அச்சுறுத்தல் குற்றச்சாட்டுக்குள் பிரியங்கா பெர்னாண்டோ சிக்கியிருந்தார்.

அவருக்கு எதிரான வழக்கு பிரித்தானிய நீதிமன்றத்தில் நீண்டகாலம் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என்பது பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்றைய குற்ற நிரூபிப்பு தீர்ப்பின் போது தலைமை மஜிஸ்திரேட் எம்மா அர்புத்நொட்,

பிரியங்கர பெர்னாண்டோ குறைந்தபட்ச எச்சரிக்கையை செய்ய நினைத்தார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை பிரிகேடியர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தால் அது திட்டமிட்ட சைகையாக காணப்பட்டது.

பிரிகேடியர் பதக்கங்களை அணிந்த சீருடையில் மூத்த அதிகாரியாக இருந்தார். அங்குள்ள பிற மூத்த அதிகாரிகளை போலல்லாமல் அவரது உடல்மொழி திமிர் பிடித்ததாகவும் அச்சுறுத்தலாகவும் காணப்பட்டது.

இதன்போது ஒரு சைகை மட்டுமல்ல மூன்று சைகைகள் கட்டப்பட்டன. இலங்கை மற்றும் தமிழீழ ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையிலான உறவின் பின்னணியில், இது குறைந்தபட்ச அச்சுறுத்தலாக இருந்திருக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும் – என்று தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்