மீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்?

யாழ் மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் இரண்டாவது தடவையாக இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபைநிதியை முறைகேடாக கையாள்வது உட்பட தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மாநகர முதல்வர் ஆர்னோல்ட்டினால்; சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டமே மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எனினும் முதல்வருக்குள்ள அதிகாரத்தின் கீழ் முதல் இரண்டுவருடத்தினுள் அவரை பதவி கவிழ்க்க முடியாதென்பதுடன் வரவு செலவு திட்டத்தை அவரே அங்கீகரிக்க முடியும்.

எனினும் பின்னராக வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர் முதல்வர் பதவியை தொடர்வது பெரும்பான்மையினை இழந்த சூழலின் மத்தியில் என எதிர்தரப்புக்கள் விமர்சனங்களை எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே கொழும்பு மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 65 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 78 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய கொழும்பு மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 65 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்