சுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது!

சுய தனிமைப்படுத்தல் உத்தரவுகளை புறக்கணித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜா-எல, சுதேவெல்ல பகுதியில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் உளவுத்துறை நடவடிக்கை காரணமாகவே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்புகளை பேணியமைக்காக குறித்த 28 பேரையும் சுய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றுமாறு ஜா-எல பொதுசுகாதார அலுவலகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் இவர்கள் அந்த உத்தரவுகளை பின்பற்றாது அசமந்த போக்கில் நடமாடி வந்த நிலையிலேயே கடற்படையினரின் உளவு நடவடிக்கை காரணமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அனைவரையும் ஒலுவிலிலுள்ள கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்