சுமந்திரனின் துரோகம்:போட்டுடைத்த தவராசா!

தனக்கு கிடைத்திருக்க வேண்டிய ஜனாதிபதி சட்டத்தரணி பதவியினை எம்.ஏ.சுமந்திரன் தட்டிப்பறித்திருப்பதாக முன்னணி சட்டத்தரணியான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கி செவ்வியில் இதனை தெரிவித்துள்ள தவராசா 2017ம் ஆண்டில் ஜனாதிபதி சட்டத்தரணி பதவிக்காக தனது பெயர் பட்டியலில் இருந்ததாக தெரிவித்த அவர் ஆனால் இறுதியில் அது நீக்கப்பட்டு சுமந்திரனின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அதே போன்று தற்போது தேசியப்பட்டியலில் முதலாவதாக தனது பெயர் இருந்திருந்த நிலையில் அதுவும் தூக்கியடிக்கப்பட்டு சுமந்திரனால் அம்பிகா பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்