காலில் வீழ்ந்தார் சுமந்திரன்?

கத்தோலிக்க அமைப்புக்களிற்கு பணத்தை அள்ளிவீசுவதன் மூலம் வெற்றியை பெற சுமந்திரன் பாடுபடுவதான மறவன்புலோ சச்சிதானந்தன் போன்றோரின் குற்றச்சாட்டுக்கள் மத்தியில் யாழ்.மறை மாவட்ட பேராயர் அதிவணக்கத்துக்குரிய யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனுடன் சந்திப்பொன்று நடந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் முக்கியத்துவம் , அதன் பெறுபேறுகள் தேசிய அரசியலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மற்றும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட களநிலவரம் என்பன குறித்தும் இருவரும் சுமார் ஒருமணி நேரம் உரையாடியதாக கட்சி அறிவித்துள்ளது.

குறிப்பாக இந்தத்தேர்தலில் தமிழ்மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொருவரும் தத்தமது வாக்குகளின் பெறுமதி உணர்ந்து செயற்பட வேண்டுமென்று பேராயர் வலியுறுத்தியதாக தெரியவருகிறது .

முக்கியமான ஒரு காலகட்டத்தில் தமிழ்மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் தேவையற்ற சர்ச்சைகள் வேண்டுமென்றே கிளப்பி விடப்படுவது குறித்து கவலை வெளியிட்ட பேராயர் வேட்பாளர்கள் சுயநலமற்றவர்களாக பொறுப்புடன் செயற்பட்டு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வெற்றிக்காக உழைக்கவேண்டுமென்று ஆசியும் வழங்கியதாக சுமந்திரன் தரப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே டக்ளஸ் தேவானந்தாவின் தீவிர ஆதரவாளரென அடையாளப்படுத்தப்பட்ட யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை தென்னிந்திய திருச்சபையினை சேர்ந்த சுமந்திரன் சந்தித்தமை விவாதத்தை தோற்றுவித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்