தேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது? – சி.வி. கேள்வி

தேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் இருந்து பணத்தைக் கோருவது தவறான செயற்பாடல்ல என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “மக்களிடம் சென்று அவர்களுக்காக பணம் கோருவதில் என்ன தவறு உள்ளது? பின்வாசல் வழியாக யாரிடமோ பணத்தைப் பெற்று அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்காமல், மக்களிடம் பணத்தைப் பெற்று அவர்களுக்கு சேவை செய்வதில் என்ன பிழை உள்ளது?

மக்களிடம் இருந்து பணத்தை பெறும்போது அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தார்மீகக் கடப்பாடு எமக்கு உள்ளது. மக்களை நம்பிக்கைக்கு பொறுப்பாக்கி அவர்களுக்கு நம்பிக்கையாக நாம் இருப்பதற்காக இதனை செய்துள்ளோம். இதில் எவ்விதமான பிழையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை்” என மேலும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்