சுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் எண்ணும் நிலையத்தில் துரோகி சுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் மீது பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மோசமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் அங்கு நின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவின் மகனும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான கலையமுதன் உட்பட பல இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில், கலையமுதன் தள்ளி வீழ்த்தப்பட்டு மோசமாக தாக்கப்பட்டார். சுமந்திரனின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரே இவர்களை தாக்கினர்.

ஏற்கனவே, சசிகலா வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் பல மணி நேர இழுபறிகளுக்கு பின்னர் சுமந்திரன் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் மோசடியான முறையில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராவதை இளைஞர்கள் விரும்பியிருக்கவில்லை. அத்துடன், மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலாவின் வெற்றியை இவர் தட்டிப்பறித்தமையாலும் இளைஞர்கள் கடும் கொதிப்படைந்திருந்தனர்.

இந்நிலையில், சுமந்திரன் இரவு 1.00 மணியளவில் வாக்கெண்ணும் நிலையத்திற்கு வருகைதந்தார். அங்கிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுமந்திரனுக்க எதிராக கடுமையான கோசங்களை எழுப்பினர்.

இதன்போது, எவருமே எதிர்பார்க்காத நிலையில், விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து இளைஞர்களை கடுமையாகத் தாக்கினர். துரத்தித் துரத்தி பொல்லுகளால் கண்டபடி அடித்து துவம்சம் செய்தனர்.

இதன்போதே மாவை.சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் படையினரால் கீழே தள்ளி வீழ்த்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பல இளைஞர்கள் காயமடைந்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்