தமிழ் மக்கள் கூட்டணியை பதிவதற்கான விண்ணப்பத்தை மீளப்பெற்றார் விக்கி

தமிழ் மக்கள் கூட்டணியை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக தேர்தல் திணைக்களத்தில் கொடுத்திருந்த விண்ணப்பத்தை அதன் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் திரும்பப் பெற்றிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இந்த விண்ணப்பத்தை அவர் கொடுத்திருந்த போதிலும், பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படும் வரையில் அதற்கான அங்கீகாரம் தேர்தல் திணைக்களத்தினால் கொடுக்கப்படவில்லை.

அதனால், ஈ.பிஆர்.எல்.எப். கட்சியின் பெயரை ;தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி என மாற்றி மீன் சின்னத்தில் அவரது கட்சி பொதுத் தேர்தலில் களமிறங்கியிருந்தது. ஒரு ஆசனமும் அவருக்குக் கிடைத்திருந்தது.

இந்தநிலையில் இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் தேர்தல் திணைக்களத்துக்குச் சென்ற விக்கினேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணியைப் பதிவதற்காகக் கொடுத்திருந்த விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுள்ளார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமிழ் மக்கள் கூட்டணியைப் பதிவதற்கான விண்ணப்பத்தை எதிர்வரும் ஜனவரியில் மீளச் சமர்ப்பிப்பதற்கு விக்கினேஸ்வரன் திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்