மாவைக்கு மீண்டும் முதலமைச்சர் கனவு?

தமிழ் அரசுக்கட்சியின் களையெடுப்பு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மாகாணசபை கனவுகளுடன் ஓடிப்பிடித்து சந்திப்புக்களை சிலர் நடத்த தொடங்கியுள்ளனர்.எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு தரப்புக்களை களையெடுப்பதில் தமிழரசின் மாவை தரப்பு மும்முரமாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வவுனியாவில் சுமந்திரன் ஆதரவு சத்தியலிங்கத்தை புறந்தள்ளி சிவமோகனை முன்னிறுத்த மாவை முடிவு செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக வவுனியாவில் அவசர கூட்டமொன்றை சனிக்கிழமை கூட்டத்திற்கு முன்னதாக நடத்தியுமுள்ளார்.

இதனையடுத்து யாழ்ப்பாணத்திற்கு ஓடோடி வந்த சத்தியலிங்கம் சந்திப்புக்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே தேர்தல் தோல்வியினையடுத்து தனது தமிழரசு பதவியை துறந்துள்ள சத்தியலிங்கம் சனிக்கிழமை களையெடுப்பில் தானும் தூக்கப்படலாமென அச்சங்கொண்டுள்ளார்.

இதனிடையே சனிக்கிழமைக்கு முன்னதாக மாவையினை குளிர்விக்க சுமந்திரன் தரப்பு முற்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தேசியப்பட்டியல் ஆசனத்தை முதல் இரண்டரை ஆண்டுகளாக கலையரசன் பதவியை வகிப்பார், அதன்பின்னர் மாவை சேனாதிராஜா அந்தப்பதவியை வகிப்பார். எனினும் வடக்கு மாகாண சபை தேர்தலில் மாவை போட்டியிட்டு முதலமைச்சர் பதவியைப் பெற்றால் இந்த ஏற்பாடு மாறும் என சுமந்திரன் தரப்பு புதிய பேரமொன்றை ஆரம்பித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்