சிறிலங்கா நாடாளுமன்ற ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படாத விக்கியின் உரை

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் நீதியரசருமான சி.வி விக்கினேஸ்வரன் பாராளுமன்றில் ஆற்றிய உரை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படவில்லை.

சிங்கள தலைவர்கள் பலர் விக்கினேஸ்வரனின் உரை இனவாதம் என்று கூறி அதனை பாராளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்குமாறு குரல் கொடுத்தருந்த நிலையிலும் சபாநாயகர் அதனை நீக்கவில்லை.

அதே வேளை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழர்கள் தான் இலங்கையின் மூத்த குடிகள் என்று உரையாற்றியது போன்று, அதனை நிரூபிக்கும் வகையில் ஆய்வுக் கட்டுரைகளை ஆவணங்களை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பாராக இருந்தால். அது தமிழர்கள் தொடர்பான அவரது காத்திரமான பணியாக அமையும் என்பது திண்ணம்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்