டெலோவை உடைக்கும் சுமந்திரன்?

கூட்டமைப்பில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதிக்கத்தை குறைத்துவிட செல்வம் அடைக்கலநாதன் முதல் பங்காளிகள் வரையாக தலையால் நடக்க சத்தமின்றி தனது அடுத்த கட்ட பயணத்தை ஆரம்பித்துள்ளார் சுமந்திரன்.

வடமராட்சியில் தனது இலங்கை தமிழரசுக்கட்சியின் வடமராட்சி காரியாலயத்தை அவர் திறந்து வைத்துள்ளார்.

ஏற்கனவே கரணவாய்,உடுப்பிட்டி வருடத்திற்கொரு தடைவ காரியாலயங்களை திறப்பதும் பின்னர் அதனை இழுத்து மூடுவதும் வழமை.

இவ்வாறு ஏற்கனவே திறக்கப்பட்ட அலுவலக ங்களை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது புதிதாக ஒரு அலுவலகத்தை திறந்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

இதனிடையே தனது அலுவலக திறப்பு விழாவில் டெலோ சார்பு கரவெட்டி துணை தவிசாளரையும் அழைத்து தமிழரசுடன் இணைத்துமுள்ளார்.

அவரும் தனது பங்கிற்கு மாலை மரியாதையென தூள் பறத்தியுள்ளார்.

இதனிடையே யாழ்.மாவட்டத்தில் டெலோ மூன்று அணிகளாக பிளந்துள்ளது.

சிறீகாந்தா அணி,சுரேன் தலைமையிலான செல்வம் அணி மற்றும் விந்தன் அணியென சிதறுண்டுள்ளதால் ஆதரவாளர்கள் பலரும் தமிழரசில் இணைய ஆர்வாம் கொண்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்