மாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி?

வடக்கு மாகாண சபையின் தேர்தலை புறக்கணிக்க மீண்டும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆராய்ந்துவருகின்றதென அதன் சர்வதேச பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழரசுக்கட்சியின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா போட்டியிட மும்முரமாக உள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அதனை ராஜினாமா செய்து மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது கனவாக இருந்தது.

இந்நிலையில் மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயார் நிலையில் உள்ளபோதும் அந்த சந்தர்ப்பம் மாவை சேனாதிராஜாவிற்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே கடந்த மாகாணசபை தேர்தலை புறக்கணித்த முன்னணி இம்முறையும் அதனை புறக்கணிக்குமென கட்சியின் சர்வதேச பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்