பிரபாகரன்புரட்சியின் குறியீடு – கவிபாஸ்கர்

பிரபாகரன்! இது…
வெறும் பெயர்ச்சொல் இல்லை!
புரட்சியின் குறியீடு!

பிரபாகரன்! இது…
வெறும் வார்த்தை இல்லை!
ஒரு இனத்தின் உயிர்ப்பு!

பிரபாகரன்!
இரவா புலி!
மறவா! மொழி!

அவன் சுற்றும் பூமி
அவனே சுழற்சி!
அவனே எழுச்சி
அவனே அரண்
அவனே அறம்!

நெருப்புக்
கர்ப்பம் தரித்துப் பிறந்தவன்!

பிரபாகரன்..
கைகால் முளைத்தக் கதிரவன்!

துவக்குகளின் துவக்கம் – பிரபாகரன்
துவண்டுபோகாத இயக்கம்!

சோழப்பரம்பரை கரிகாலன் எம்
ஆண்ட இனத்தின் எல்லாளன்!

கரும்புலி கண்டெடுத்த கன்னிவெடி
தமிழன் முகவரி மீட்டெடுத்த வரிப்புலி

தாயின் கர்ப்பபை இருட்டறை – இவன்
தாயின் இருப்போ நெருப்பறை!

புறநானூற்றை படித்த இனம்- இன்று
பிரபாகரனை படிக்கிறது!

வல்வெட்டித்துறை – அது
தமிழரின் வரலாற்றுத் துறை!

குறள் எங்கள் மறை – தலைவன்
குரல் எங்கள் பறை!

எல்லாம் முடிந்தது என்று
சிலர் சொல்கிற கதை!
தொடக்கம் தோற்காது என்பது
தலைவன் போட்ட விதை!

பிறந்ததும் அழுகிறவர்கள் நாம்!
அழுகிறவர்களுக்காகப்
பிறந்தவன் பிரபாகரன்

மடிந்தவர்களுக்காக
மாரடிப்பவர்கள் நாம்
மடிந்தவர்களுக்காகவே
விடிந்தவன் பிரபாகரன்!

தமிழீழ விடுதலை வேள்விக்கு
தீக்குச்சிகள் தயாரித்த
தமிழீழத் துருவன் – எங்கள்
தலைவன் பிரபாகரன்!

ஆயுத்தத்தில் அறத்தையும்
அறத்தில் ஆயுத்தையும்
ஆட்கொண்ட தலைவன்
பிரபாகரன்!

தமிழர் நிலத்தை மீட்கும்
ஆற்றல் கொண்ட ஏறு
எங்கள் பிரபாகரன் பேரு!

பிரபாகரன்
எழுச்சியின் அடையாளம்
புரட்சியின் பூபாளம்!

போராளிகளின் தாயுமானவன்
பேரொளியின் கிழக்கானவன்!

விடுதலையின் இலக்கானவன்
விடியலின் விளக்கானவன்

இடர் பட்டத் தமிழினம்
ஒடிந்து கிடந்த போது – எதிரிகளை
இடிபோலத் தாக்கிய
எல்லாளன் – எங்கள் பிரபாகரன்!

அன்று இராசராசன் சோழன்
இன்று பிரபாகரன் வேலன்
அவன் தரைப்படை கட்டியவன்
இவன் முப்படைகட்டி
அவனையே முந்தியவன்!

போர்க்களத்தின் நெருப்பு
சமத்துவத்தின் திறப்பு..
புறநானூற்றின் விழிப்பு
தலைவன் பிரபாகரனின் பிறப்பு!

எரிமலை நெருப்பை சுமந்தவன் – அவன்
எரிகிற நெருப்பாய் பிறந்தவன்
தமிழர் இனத்துக்கு தலைமகன் – புதிய
திசையை காட்டிய பெருந் தலைவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்
அவன் பிரபாகரன் அவன் பிரபாகரன்

மின்னல் இடியாய் மின்னியவன் – பெரும்
இன்னலை வெடியாய் விரட்டியவன்
முப்படை முதலில் கட்டியவன் – புலி
எப்படை வரினும் முட்டியவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்
அவன் பிரபாகரன் அவன் பிரபாகரன்

புல்லையும் போர்வாளாய் மாற்றியவன் – தமிழ்
பிள்ளைக்கு இன உணர்வு ஊட்டியவன்
வில்லையும் சொல்லையும் ஏந்தியவன் – போர்
எல்லையில் வென்றிட முந்தியவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்
அவன் பிரபாகரன் அவன் பிரபாகரன்

துவக்கின் விழிகளில் சீறியவன் – ஒரு
இலக்கின் வழிகளில் பேசியவன்
கிழக்கின் சிவப்பாய் மாறியவன் – ஒளி
விளக்கில் இருளையே மாற்றியவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்
அவன் பிரபாகரன் அவன் பிரபாகரன்

தமிழர் மனதினில் ஏறியவன் – இன
உணர்வை நரம்பினில் ஏற்றியவன்
ஈழ யாழினை மீட்டியவன் – எங்கள்
இளைய தலைமுறையை மீட்கிறவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்
அவன் பிரபாகரன் அவன் பிரபாகரன்

செயலின் வடிவிலே ஊறியவன் – அட
புயலின் உருவமாய் வீசியவன்
மானத் தமிழரை அணைக்கிறவன் – ஒரு
புள்ளியில் புலிகளை இணைக்கிறவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்
அவன் பிரபாகரன் அவன் பிரபாகரன்

விடுதலை கனவைத் தீட்டியவன் – இன
கொடுமையை தடுக்கிற வீரனவன்
உலகம் பேசுற தலைவனவன் – எம்
தமிழ் குலம் காக்கிற சாமியவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்
அவன் பிரபாகரன் அவன் பிரபாகரன்

சோழப் பரம்பரையின் கரிகாலன் – அவன்
ஆண்ட தமிழினத்தின் எல்லாளன்!
கரும்புலி கண்டெடுத்த தீப்பொறி – எங்கள்
முகவரி மீட்டெடுத்த வரிப்புலி

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்
அவன் பிரபாகரன் அவன் பிரபாகரன்

வல்வெட்டித் துறையில் பிறந்த அறம் –எம்
வரலாற்றுத் துறையாய் வளர்ந்த அரண்!
தமிழீழம் வென்றிட இலக்கானவன் – எம்
தமிழ்வீரம் பாய்ந்திட துவக்கானவன்!

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்
அவன் பிரபாகரன் அவன் பிரபாகரன்

தமிழர் எழுச்சியின் வடிவேலன் – எம்
புரட்சி குறியீட்டின் அடையாளம்!
நெருப்புக் கருவறையில் பிறந்தவன்! –இவன்
கைகால் முளைத்தக் கதிரவன்!

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்
அவன் பிரபாகரன் அவன் பிரபாகரன்

எதிரியை எரித்திடும் எறிகணை வெறி! இன
உணர்வினை உசுப்பிய எரிமலை திரி!
விடுதலை கதவையினை திறக்கிற நெறி – எந்த
கெடுதலை கண்டாலும் வெடிக்கிற வெடி!

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்
அவன் பிரபாகரன் அவன் பிரபாகரன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்