அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா.ஜ.க.வில் இணைவு – எடப்பாடி அரசுக்கு நெருக்கடி!

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

ஜெயலலிதா மறைந்தது முதல் அதிமுக கட்சிக்குள் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. 6 மாத இழுபறிக்கு பின்னர் பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இரு அணிகள் ஒன்றாக இணைந்தால் சிக்கல்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தினகரன் தலைமையிலான அணி தனியாக விஸ்வரூபம் எடுத்தது. ஈபிஎஸ் மற்றும் தினகரன் அணிகளுக்கு இடையே சண்டை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிள் பா.ஜ.க.வில் இணைந்தனர். வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைநதனர். இந்த இணைப்பின் போது மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடன் இருந்ததாக தெரிகிறது.

ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் பா.ஜ.க.வின் கட்டுப்பாடில் இயங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்த இணைப்பால் அதிமுக கட்சிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

தொடர்டர்புடைய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும்
இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கௌரவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
விஷாலும் தனிக்கட்சி துவங்கும் ஐடியாவில் உள்ளாராம். பல காலமாக இழுத்தடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வழியாக தனிக்கட்சி துவங்கி

About இலக்கியன்

மறுமொழி இடவும்