யாழ்.பல்கலையில் சுடரேற்றல்:ஆரியகுளத்தில் மரநடுகை!

இலங்கை அரசு மாவீரர் தினத்தை முடக்கிவிட துடிக்க இயலுமானவரையில் நினைவேந்தலை தமிழ் சமூகம் முன்னெடுத்தே வருகின்றது.

யாழ்.பல்கலையில் மாவீரர் தின விளக்கேற்றலிற்கு இலங்கை காவல்துறை தடை பெற்றுள்ள நிலையில் இன்று மாவீரர் நினைவுதூபியில் தடாலடியாக மாணவர்கள் அஞ்சலித்து சுடரேற்றியுள்ளனர்.

புல்கலைக்கழ சூழலை சுற்றி படையினர் காத்திருக்க மாணவர்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

இதனிடையே யாழ்.நகரிலும் மரநடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரியகுளத்தை சூழ அழகுபடுத்தலின் கீழ் மரங்களை மாநகரசபை உறுப்பினர்கள் நாட்டியுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்