வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் கடந்த (12.12.2023) திகதியில் இருந்து (20.12.2023) வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி இன்று திறந்து வைக்கப்பட்டது.
கனமழை காரணமாக தேக்கிவைக்க முடியாத மேலதிக நீரினை பெரும்கடற்பரப்பில் செல்லுவதற்கு திறந்து விடப்பட்டன. இதனை யாழ்ப்பாண மாவட்ட நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களினால் திறந்து விடப்பட்டன. குறித்த வாவியில் மீனவர்களால் மீன்பிடி ஈடுபட்டு வருகின்றனர்.

