முல்லையில் துயிலுமில்ல காணி பிடிப்பு!

தமிழ் மக்களிற்கான விடிவினை தந்துவிடப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மறுபுறம் காணிபிடிப்புக்கள் பௌத்தமயமாக்கல் என்பவை தளர்வின்றி தொடர்கின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுவீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி வியாழக்கிழமை (18) இடம்பெறவிருந்த நிலையில் அளவீட்டு பணிகள் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் நில அளவை திணைக்கள அதிகாரிகள் நில அளவீட்டு பணிக்காக துயிலும் இல்ல காணிக்கு சென்றபோது அங்கு கூடிய மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

நாம் எமது உறவுகளை புதைத்துள்ள நிலங்களை கைவிடமாட்டோம்.காணியை அளவிட அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு குரல் எழுப்பியிருந்தனர்.அதன் அடிப்படையில் துயிலுமில்ல காணிகளது அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து துயிலுமில்லங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு படை முகாம்களாக பேணப்பட்டுவருகின்றது.

அதேபோன்று வன்னியிலும் பெரும் பகுதி துயிலுமில்லங்கள் படைமுகாம்களாக்கப்பட்டுள்ள நிலையில் காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க சதிகள் மக்களின் எதிர்ப்புக்களிற்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்