வியாபாரா நிலையங்களை பூட்டி மாவீரர் நாளிற்கு மதிப்பளித்த புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள்

புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும் பூட்டி இன்றையதினம் மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் பூட்டி யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆதரவு வழங்கியுள்ளதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் தர்மலிங்கம் நவநீதன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு இன்று மாலை அஞ்சலி செய்வதற்கு தயாராகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்