தற்கொலை தாக்குதலில் ஆப்கானில் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மான்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்றில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அண்மைய வாரங்களில் கடும் மோதல் இடம்பெற்று வரும் நவா மாவட்டத்தில் இராணுவ வாகனம் ஒன்றை இலக்கு வைத்தே கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் இரு படையினருடம் பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர். நவா பகுதியை தலிபான்களிடம் இருந்து மீட்டதாக ஆப்கான் பாதுகாப்பு படை ஒரு மாதத்திற்கு முன் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நவா மாவட்டத்தின் சிறிய சந்தை ஒன்றுக்கு அருகால் பயணித்த இராணுவ வாகனங்கள் மீது தற்கொலைதாரி ஒருவர் வெடிபொருட்களை நிரப்பிய கார் வண்டியை வெடிக்கச் செய்ததாக மாகாண ஆளுநரின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் காயமடைந்த 19 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலிபான்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஊடகவியலாளர்களுக்கு வட்ஸ்அப் ஊடே செய்தி அனுப்பியுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்