போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவள சிகிச்சை அவசியம் – வடமாகாண முதலமைச்சர்!

நீண்கால யுத்தம் காரணமாக எமது மக்கள் நடைப்பிணங்களாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு உளவளத் துணை சிகிச்சை அவசியம் வழங்கப்படவேண்டிய தேவையுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இம்மக்களில் பலருக்கு உளத் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றைக் குறைப்பதற்கு அல்லது முற்றாகக் குணப்படுத்துவதற்கு சிகிச்சை வழங்குவது அவசியமாகும்.

கிளிநொச்சியில் மனநல மருத்துவமனையைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், உளநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு பிரச்சனையின் தாக்கம் உடனடியாகத் தெரிந்துகொள்ளமுடிவதில்லை. அவர்களின் குடும்பத்தினரால் கூட இதன் தாக்கத்தை உடனடியாகப் புரிந்துகொள்ளமுடியாது. இவ்வாறானவர்களின் நோய்த் தாக்கம் அதிகரிக்கும்போது ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாத உரையாடல்கள், அளவுக்கதிகமான விளக்கங்கள் என அடையாளங்காணப்படுகின்றனர்.

சிலகாலங்களுக்கு முன்னர் உளவியல் தாக்கங்களுக்கு உள்ளானவர்கள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது அப்படியில்லை. தற்போது நிலமைகள் எவ்வளவோ முன்னேறி விட்டது.

உள­நல சிகிச்சை தொடர்­பாக மருத்­து­வ­ம­னை­க­ளின் பணி­க­ளுக்கு மேல­தி­க­மாக தன்­னார்­வத் தொண்டு நிறு­வ­னங்­கள், பொது அமைப்­பு­கள் ஆகி­யன இவர்­களை அடை­யா­ளம் காண்­ப­தற்­கும் இவர்­க­ளுக்­கான உள­நல ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­தற்­கும் முன்­வந்­துள்­ளன.

எனினும் வெளிநாடுகள் போல் உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக அடையாளங்காணப்பட்டு அவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க அரசாங்க மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்