தமிழ்ப் பெண்கள் போன்று தலையில் பூமாலை அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸார்

ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு கலை கலாச்சார விழுமியங்கள் உள்ளன. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் எமது காலாச்சார விழுமியங்களை கட்டிக்காத்தல் வேண்டும்.எமது கலைகலாச்சாரங்களை பேணிப்பாதுகாக்கும் அதே சமயத்தில் மற்றைய இனத்தவர்களின் கலாச்சாரங்களை அவமதிக்காது நடத்தல் வேண்டும்.இந்த விடயத்தில் வெள்ளைகார்கள் மற்றைய இனத்தவர்களின் கலாச்சாரங்களை மதிப்பவர்களாக காணப்படுகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழா இடம்பெற்றது.இதில் பாரிஸ் வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்தத் திருவிழாவில் பாரிஸ் பொலிஸார் போக்குவரது கடமையில் ஈடுபட்டிருந்தனர் .

கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸார் தமிழ்ப்பெண்கள் அணிவது போல தலையில் பூமாலை அணிந்து காணப்பட்டனர் . இதனை பார்த்த தமிழர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்