விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில்!

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன.

சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன.

குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தது, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு விடயங்களை முன்வைத்து குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஒன்றில், “தமிழீழத்தில் ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி தவறிழைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய துண்டுப்பிரசுரத்தில், வவுனியாவுக்கான முக்கிய அறிவித்தல்! என்ற தலையங்கத்தில்,

“தமிழீழத்திற்காக உயிரிழந்தவர்கள் கண்ட கனவுகள் உண்மையாகும் நேரம் வந்து விட்டது. இன்னும் நாங்கள் முற்றாக அழிந்து விடவில்லை.” போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த
முல்லைத்தீவு பெருங்காட்டு புகதியில் கண்டுபிடிக்கப்பட் விடுதலை புலிகளின் நிலத்தடி காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோப்பாப்புலவு புதுக்ககுடியிருப்பு பிரதான

About இலக்கியன்

மறுமொழி இடவும்