கிளிநொச்சியில் கஞ்சா பொதி மீட்பு! ஒருவர் கைது!

கிளிநொச்சி – தர்மபுரம் காவல் துறை பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல் துறையினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி காவல் துறை அதிபரின் போதைப்பொருள் ஒழிப்பு விசேட பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்