போரின் போது ஜகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபடவில்லை – மகிந்த சமரசிங்க

போர் இடம்பெற்றபோது ஜகத் ஜயசூரிய குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்தாவது-

அரசு எப்போதும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்காகச் செயற்படும். அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். அது கட்சியின் பொது கருத்து அல்ல.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சரவையில் இது குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை. இராணுவத்தினர் எந்த சந்தர்ப்பத்திலும் காட்டிக்கொடுக்கப்பட மாட்டார்கள்.- என்றார்.

இதேவேளை அமைச்சர் சரத் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க தயார் என்று நேற்று கூறியிருந்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன்
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா

About இலக்கியன்

மறுமொழி இடவும்