அம்பாறையில் தமிழ்க் கிராமத்தை தத்தெடுத்த ஜெர்மனியைச் சேர்ந்த யாழ். இளைஞன்

அம்பாறை மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டில் 52 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடமான திராய்க்கேணி தமிழ்க் கிராமத்தை ஜெர்மனியைச் சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் தத்தெடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த மகான்கோடீஸ்வரன் என்பவரே திராய்க்கேணி கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இவர் யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஜெர்மனியக் கிளையின் உறுப்பினராவார்.

மகான்கோடீஸ்வரன் மற்றும் ஜெர்மனியக் கிளைத்தலைவர் கிளாரன்ஸ் செல்லத்துரை ஆகியோர், அம்பாறை மாவட்ட சமூகசேவையாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்த அழைப்பை ஏற்று கடந்த மாதம் திராய்க்கேணி கிராமத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்கள்.

அதன்பின் ஜெர்மன் சென்ற இவர்கள், திராய்க்கேணியை தாம் தத்தெடுப்பதாகவும், இதன் முதற்கட்டமாக 16 வீடுகளை கட்டிக்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்ற நிலையில், தற்போது 5 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

ஏனைய வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. அதன் திறப்பு நிகழ்வில் ஜெர்மனிலிருந்து மகான்கோடீஸ்வரன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்