நீட் தேர்வை எதிர்த்து எதிர்வரும் 9ஆம் திகதி போராட்டம் – தினகரன் அறிவிப்பு!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் 9-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வால் மருத்து கனவு பறிபோனதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் நீர் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் 9-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் இதில் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மாணவர்கள் பற்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மாநில உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் கட்சியை சேர்ந்த தினகரன் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்