மாயாமான விமானம் விபத்துக்குளாகவில்லை : மலேசியன் ஏர்லைன்ஸ்

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற விமானம் மாயமாகி உள்ளது. இந்த விமானம் விபத்தில் சிக்கி, கடலில் விழுந்துவிட்டதாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, 40 கப்பல்கள், 22 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வியட்நாம் கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், விமானத்தில் சென்ற நால்வர் போலி பாஸ்போர்ட் எடுத்துள்ளதும், இருவர் விமானத்தில் பயணிக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து, விமானம் மாயமானதற்கு பயங்கரவாத பின்னணி காரணமாக இருக்கலாம் என்று கருதி, அது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், தங்கள் விமானம் விபத்தில் சிக்கவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உறுதிபட தெரிவித்துள்ளது.

Top