தமிழ்க் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைய வேண்டும்

புதிய அர­ச­மைப்­பின் ஊடாக வடக்கு -– கிழக்குத் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தீர்­வைப் பெற்­றுக்­கொ­டுக்கத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பும், சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸூம் இணைந்து செயற்­பட வேண்­டும். இதற்­காக இரண்டு கட்­சி­க­ளும் விட்­டுக் கொடுப்­பு­டன் செயற்­பட வேண்­டும்.

இவ்­வாறு கிழக்கு மாகாண முத­ல­மைச்­சர் ஹாபிஸ் நசீர் அஹ­மட் மட்­டக்­க­ளப்­பில் நேற்றுமுன்­தி­னம் நடை­பெற்ற நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:சிறு­பான்­மை­யின மக்­க­ளின் உரி­மை­களைப் பெற்­றுக்­கொ­டுக்க எடுக்­கப்­ப­டும் ஒவ்­வொரு முயற்­சி­க­ளை­யும் குழப்­பும் பணி­க­ளில் தீவி­ர­வா­தி­கள் சிலர் செயற்­ப­டு­கின்­ற­னர்.

அதை முறி­ய­டிக்க வேண்­டும். இதே­வேளை எதிர்க்­கட்சி தலை­வ­ரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் நாட்­டில் சிறந்த தலை­வர் – – என்­றார்.

இந்த நிகழ்­வில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் கோவிந்­தன் கரு­ணா­க­ரம், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான மகிந்த அணி­யி­னர் புதிய அர­ச­ மைப்­புப் பணி­களைக் குழப்­பும் முயற்­சி­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இவ்­வா­றான சந்­தர்ப்­பத்­தில் தமிழ் மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் சிலர் 20ஆவது திருத்­தச்­சட்ட வரைவு தொடர்­பாக உண்­மைக்குப் புறம்­பான தக­வல்­கள் பரப்­பு­கின்­ற­னர் – -– என்­றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்