காதலியை கொலைசெய்த காதலன்! எப்படி சிக்கினார் தெரியுமா?

ஹைதரபாத்தில் சந்தினி என்னும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த சனி கிழமை (09-09-2017) அன்று நண்பர்களை சந்திக்க செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் சந்தினியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சந்தினியின் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சந்தினியின் வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் மாணவியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

பின்னர் சந்தினியின் உடலை காண வீட்டிற்கு வந்த நண்பன் சாய் கிரணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தினி சாய் கிரணை சந்திப்பதற்காகவே சனி கிழமை சென்றது தெரியவந்துள்ளது.

மேலும் சந்தினியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, சாய் கிரண் மற்றும் சந்தினி ஆகிய இருவரும் ஒரே ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கியதும் தெரியவந்தது.

போலீசாரிடம், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை இருவரும் ஒன்றாக படித்ததாகவும், கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தததாகவும் சாய் கிரண் தெரிவித்தார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சந்தினி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் கூறினார்.

மேலும் கடந்த சனி கிழமை சந்தினியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாய் கிரணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சந்தினி வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் சந்தினியை சாய்கிரண் கிழே தள்ளியுள்ளார். இதனால் 10 அடி ஆழமுள்ள குழியில் விழுந்த சந்தினி மரணமடைந்துள்ளார்.

சந்தினியை கொலை செய்த சாய் கிரனை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபருடனான பேச்சு வார்த்தையை திடீரென ரத்து செய்வதாக அறிவித்தபின் முதன்முறையாக வட கொரிய
சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*