எழுச்சி கொள்ளும் பிரித்தானியா- தமிழர் வீடுகளில் திலீபனுக்கு அஞ்சலி!

பிரித்தானியாவில் தமிழர்கள் தமது வீடுகளில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களைப் போல் அல்லாது இவ் ஆண்டு புதிய முயற்சியும், எழுச்சியும் கொண்டு தமிழ் மக்கள் யகத்தில் முன்பு எப்படி தமது வீடுகளில் தியாக தீபம் திலீபனுக்கு சிறு கொட்டகை அமைத்து படம் வைத்து மலர் மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினரோ அதே போல் இங்கும் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையும், எழுச்சியையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இது போன்று அதிகளவான வர்த்தக நிலையங்களிலும் திலீபனின் படங்கள் வெளிப்புறமாக ஒட்டப்பட்டிருப்பதை காண முடிகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*