போர்க்குற்றத்தினால் பொன்சேகாவுக்கு வீசா மறுக்கப்பட்டமை பொய்?கம்மன்பில

ஸ்ரீலங்கா இராணுவம் மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே தனக்கான அமெரிக்கா வீசா மறுக்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறிய விடயம் முற்றிலும் பொய்யாக சோடிக்கப்பட்டவை என்று ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த தகவலை வெளியிட்டார்.

போர்க் குற்றச்சாட்டை சாட்டுப்போக்காக வைத்து ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா இராணுவத்தையும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவமானப்படுத்திவிட்டதாகவும் அவர் கூறினார்.

ஐ.நா பொதுச் சபையின் 72ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழு அமெரிக்காவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றது.

இதில் கலந்துகொள்வதற்கு வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இருந்தது. எனினும் ஸ்ரீலங்கா இராணுவம் மீது காணப்படுகின்ற போர்க் குற்றச்சாட்டு காரணமாக தனக்கான வீசாவை அமெரிக்கா நிராகரித்ததாக சரத் பொன்சேகா அண்மையில் கெலனி பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு முன்பாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்