தியாகி திலீபன் நினைவாக யாழ். இந்துக் கல்லூரியில் குருதிக்கொடை

தமிழ் மக்களுக்காக பட்டினித் தீயில் தன்னை உருக்கி ஆகுதியாக்கிய தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவாக யாழ்.இந்துக் கல்லூரியில் குரதிக்கொடை முகாம் ஒன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் இந்த இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.

2012 க.பொ.த உயர்தரப் பிரிவு மாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் இந்த இரத்தான முகாம் நடைபெறவுள்ளது.

வருடா வருடம் திலீபனின் நினைவேந்தல் காலத்தில் இவ் இரத்தான முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் அனைவரையும் இதில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபன் யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர். அங்கு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, சிறந்த பெறுபேறு பெற்று யாழ்.மருத்துவபீடத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக
யாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை சர்ச்சைகளை
யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்