ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசரணை விரைவில்….திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

ஜெயலலிதா சிகிச்சையின்போது சசிகலா கூறியதைதான் தாங்கள் கூறினோம் என்றும் அவர் இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சசிகலா கூறியதையே தாங்கள் கூறினோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் முள்ளிப்பாடியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சீனிவாசன் கூறுகையில், ஜெ. மரணம் தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மர்மத்தை நான் பார்க்க வேண்டும்.

அது தொடர்பாக ஆதாரம் இருப்பதாக கூறும் தினகரன் தரப்பினர் உடனடியாக வெளியிட வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோருவது ஒன்றும் புதிதல்ல. அப்படியே சிபிஐ விசாரணை நடந்தாலும் கவலை இல்லை என்றார் அவர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்