தமிழ் அரசியல் கைதி நவதீபனின் தந்தை சிறுநீரக நோயால் பாதிப்பு, குடும்பம் நிர்க்கதி, உதவி கோரல்

ஆயுள் தமிழ் அரசியல் கைதி நவதீபனின் தந்தை இராமநாதன் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மாத்தளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது நோய்க்கு மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கே வசதி அற்ற நிலையில் குடும்பத்தினர் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

உழைத்துக் குடும்பத்தைப் பார்க்கவேண்டிய தமது மகன் சிறையில் ஆயுள் கைதியாக புதிய மகஸீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் தங்கள் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தாயார் மீனாட்சி தெரிவித்தார்.

நவதீபன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து இயங்கினார் என சிறிலங்கா அரசு குற்றம் சுமத்தியுள்ளது. அவர் கண்டியில் வெடிபொருட்கள் வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டார் என அரசும் அரச படைகளும் தெரிவித்தன.

அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றங்களில் ஒரு குற்றத்திற்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு வழக்குகள் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றன.

அவரது தந்தை இராமநாதன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

மாத்தளை உக்குவெல என்ற இடத்தைச் சேர்ந்த மேற்படி குடும்பத் தலைவரின் மருத்துவச் செலவுக்கு உதவ விரும்புபவர்கள் நவதீபனின் தாயார் மீனாட்சி என்பவருடன் 0726490741 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மேலதிக தகவல்களைப் பெற முடியும்.

வங்கி இல: 201200125390391
மக்கள் வங்கி
உக்குவெல
மாத்தளை

About இலக்கியன்

மறுமொழி இடவும்