இராணுவ முகாமிற்கு அருகில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

மன்னாா், தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவருடைய சடலத்தை இன்று (திங்கட்கிழமை) மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸார் மேற்படி சடலத்தை மீட்டுள்ளதுடன், மீட்கப்பட்டவர் சுமார் 50 வயதுடைய ஆண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்