வவுனியா இளமருதங்குளம் காட்டுப்பகுதியில் இளைஞர் கைது!

வவுனியா இளமருதங்குளம் காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் ஒமந்தை பொலிஸாரினால் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா சேமமடு, இளமருதங்குள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவதாக ஒமந்தை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செல்வா தலைமையில் பொலிஸ் சார்ஜன் ரணசிங்க, பொலிஸ் உத்தியோகத்தர் புவிசங்கர் ஆகியோர் உள்ளடங்கிய குழு குறித்த காட்டுப்பகுதியில் வைத்து முள்ளியவளையைச் சேர்ந்த 21 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.

இதன் போது 150,000 ரூபா பெறுமதியான அரியப்பட்ட பாலை மரங்களும், வெட்டுவதற்கு பயன்படுத்தும் உபகரணமும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா மற்றும் ஒமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியாவில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டம் மகாறம்பை குளம் பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வீடொன்றிலிருந்து ஆணொருவரும், பெண்ணொருவரும் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய 17வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*