வவுனியா:உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

வவுனியாவில் கடந்த 215 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது கோரிக்கைகளுக்கு இதுவரை ஆக்கபூர்வமான பதிலேதும் அரசினாலும் தமிழ் தலைமைகளாலும் வழங்கப்படாத நிலையில் சர்வதேசம் தமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும் எனகோரி இரு நாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை திங்கள் கிழமை முதல் முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து தாம் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் ஏ9 வீதியின் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாரின் உடல் நிலை சோர்வடைந்திருந்த நிலையில் இன்று மாலை 3.30 மணியளவில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட் சகோதரி நிக்கோலா அவர்களால் நீராகாரம் வழங்கி முடித்து வைக்கப்பட்டது.

எனினும் தமக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் விரைவில் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை
வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03) 33வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்