சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை நாட்டுக்கும் இனத்திற்கும் எதிரானதாம்

வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்புடையதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.எனினும், சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கை நாட்டுக்கும் இனத்திற்கும் எதிரானது எனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்கும் வகையிலானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிவாஜிலிங்கத்தின் கூற்று மிகவும் தூய்மையற்ற கோரிக்கை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்