மூளைச் சாவடைந்த இளைஞனின் கயை யுவதிக்கு பொருத்தி சாதனை

ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாதனையை இந்தியாவின் கேரள மருத்துவ்ர்கள் நிலை நாட்டியுள்ளனர்.

இந்த கை மாற்று சிகிச்சையானது கேரளாவைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்டது.

மூளைச் சாவடைந்த இளைஞன் யுவதியின் கையில் உயிரோடு வாழும் அதிசயம்!

ஸ்ரேயா எனும் கேரளாவைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கு சச்சின் என்ற 20 வயது இளைஞரின் கை பொருத்தப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் விபத்து ஒன்றின்மூலம் மூளைச் சாவு அடைந்தார்.

குறித்த ஸ்ரேயா, டாட்டா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பு ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவரது ஒரே மகளாவர். இவருக்கு கேரளாவிலுள்ள அம்ரித்தா மருத்துவமனையில் கை மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மூளைச் சாவடைந்த இளைஞன் யுவதியின் கையில் உயிரோடு வாழும் அதிசயம்!

இவரது பொருத்தப்பட்ட கை இயக்கத்துக்கு வருவதற்கு ஒன்றிரண்டு வருடங்கள் ஆகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பத்து நபர்களில் ஸ்ரேயாவும் ஒருவராவார்.

ஸ்ரேயா கடந்த வருடம் பள்ளிக்குச் சென்றபோது பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய
வடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*