முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விபத்தில் இளைஞன் மரணம்!

புதுக்குடியிருப்பு பரந்தன் பிரதான வீதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் தனது தங்கை மயக்கமடைந்துள்ள செய்தி பாடசாலையிலிருந்து கிடைக்க பெற்றதை தொடர்ந்து தனது தங்கையை பார்ப்பதற்காக அவசரமாக உந்துருளியில் பாடசாலை நோக்கி விரைந்த குறித்த இளைஞர் எதிரே வந்த கப் ரக வாகனத்தில் மோதுண்டு மிகவும் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த நிஷாந்தன் (வயது25 ) என்பவராரவர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்