ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதாக தங்கியிருந்து, புடவை வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இந்தியப் பிரஜைகள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஆண்ணொருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார் அவ்விருவரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.