திருப்பதியில் தரிசனம் பெற்ற மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

நேற்று பெங்களூர் வழியாக திருப்பதி சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரது துணைவியார் ஜெயந்தி புஸ்பா குமாரி, மகன் தஹம் சிறிசேன ஆகியோர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கியிருந்தனர்.

இன்று அதிகாலை அவர்கள் ஏழுமலையான் ஆலயத்தில் சுப்ரபாத சேவையின் போது வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து. அவர்களுக்கு திருப்பதி ஆலயத்தின் சார்பில், நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளால் சிறிலங்கா அதிபர் கௌரவிக்கப்பட்டு, ஆலய பிரசாதமும் வழங்கப்பட்டது.

சிறிலங்கா அதிபராக கடந்த 2015ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன, திருப்பதிக்குப் பயணம் மேற்கொண்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஏற்கனவே அவர், 2015 பெப்ரவரி மாதமும், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதமும் அவர் திருப்பதிக்குப் பயணம் மேற்கொண்டு தரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்